Thursday, January 11, 2007
நிழல்
பறப்பது போன்ற உணர்வு!
கால்கள் தரையில் பரவ முடியாமல்.
காணாததை கண்டது போல.....
நடப்பது தெரியவில்லை!
எதுக்காக நடக்கிறேன்?
என்பதும் புரியவில்லை.....
சிந்தனை எல்லாம்,
ஒரே விஷயத்தை;
யோசிக்கிறது......
சந்தோஷமான உணர்வை!
முழுதும் உணர்கிறேன்.
பறக்கிறேனா! எனக்கே சந்தேகம்.....
ஆனால்,
தரையில் தான் இருக்கிறேன்!
தடுமாறி இடிக்கும்போது உணர்கிறேன்!
விழுந்தாலும்,
வலி தெரியவில்லை!
அது, என் "நிழல்" அல்லவா.............!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment