Saturday, January 13, 2007
பறவைக் கூண்டு.....
பறவையை கூண்டில்,
அடைத்தால்;
பறக்க முடியாது!
பறக்க முடியாது
என்பதால்;
பறக்கத் தெரியாதா???
இருக்கும் இடத்தில்,
வாழ்வது தான்;
அதன் நியதி, விதி!
நியதி, விதியை மாற்ற,
கதவை திறக்க
"ஒரு நல்ல உள்ளம்" தேவை!
கதவை,
திறந்தாலும்;
இறக்கைகள் வெட்டப்பட்டு இருக்கும்!
இறக்கை வளரும் வரை,
பாதுகாக்க வேண்டும்!
பராமரிக்க வேண்டும்!
இறக்கை முளைத்ததும்,
பெருந்தன்மையாக...
பறக்கவிட வேண்டும்!
இத்தனையும்,
நடக்க வேண்டுமானால்
"நல்ல உள்ளம் கிடைக்கவேண்டும்"!
தேடினேன்!
தேடிக் கொண்டு இருந்தேன்...
தேடி விட்டேன்!!!
வெளியே வந்துவிட்டேன்!
பறக்க முயற்ச்சி செய்கிறேன்;
"என்னுடைய கட்டுப்பாட்டிற்க்குள்......"!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment