Monday, January 15, 2007

சந்தோஷங்கள்

சந்தோஷம்!
என்பதற்க்கு என்ன அர்த்தம்?
நினைத்ததை வாங்குவதில்?
நினைத்ததை சாதிப்பதில்?

நினைத்ததை வெளிப்படுத்துவதில்?
உலகத்தின் அத்தனை ,
சந்தோஷங்களும்;
காலடியில் கிடந்தாலும்...

ஒன்று மட்டும் தான்,
சந்தோஷத்தை தரும்!
நாம் விரும்புவர்கள்...
நம்மை விரும்புகிறார்கள் என்பது மட்டும் தான்!!!

பிடித்தவர்களிடம் இருந்து
ஒரு பாராட்டுதல்!
ஒரு புகழுரை!
புதிய அனுபவம்...

அது நம் உடையை பற்றி!
நம் குணம் பற்றி!
நம் உருவம் பற்றி!
நம் எழுத்தைப் பற்றி!

எதுவாக இருந்தாலும்,
அதை சொல்வது...
"நாம் விரும்புவர்கள்"!
"நம்மை விரும்புவர்கள்"!

அதில் எனக்கு...
"பரம சந்தோஷம்"!!!
மனதில் உள்ளதை,
"அப்படியே சொல்லவும்"!

வேஷம் வேண்டாம்,
முகமூடி வேண்டாம்!
தயக்கம் வேண்டாம்!
"உண்மை" மட்டுமே வேண்டும்!!!

இருவருக்கும் நடுவே...
முகமூடியை கொண்டுவராதே!
என்னால் தாங்கமுடியாது!
புரிந்துகொள்வாய்... நம்புகிறேன்!


சத்தியமாக அடுத்த மடலில்,
"உண்மையை மட்டுமே"
எதிர்பார்க்கிறேன்!
"நம்புகிறேன்"!!!

No comments: