Sunday, January 7, 2007

முரண்பாடு

தண்ணி அடிப்பவனிடம்
இருந்து
தன்னை காக்க,
தண்ணீர் வைக்கும்
பாத்ரூமில்,
தஞ்சம் புகுந்தாள்.


அடி, உதை....
ஏச்சு, பேச்சு,
அவள் ஏன் வெளியேறவில்லை?
உறவை ஏன் அறுக்கவில்லை......
பயமா?
பண்பா?
உறவா?
சமூகமா!
அல்லது
அன்பா!?



இவை எல்லாம் காரணம்,
முக்கிய காரணம்,
"குடி" தான் கெட்டது;
"குடிப்பவன்" இல்லை
என்ற
அப்பட்டமான "உண்மை".



வாழ்க்கையில் போராட வேண்டும்,
என்ற,
வெறி, திமிர்....துணிச்சல்!
முடியாது என்பதை
ஏற்காத முரண்பட்ட மனது.....




ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கள்.
pessimist: தேவை இல்லாமல் அடிபடுகிறாள்.
opptimist: எதையும் சமாளிப்பாள்.
society: இவளிடம் என்ன பிரச்சனையோ.
relatives: அவரவர் உறவுகள், அவரவர்களுக்கு சப்போர்ட்.

No comments: