Thursday, January 4, 2007

வாழ்க்கை

ஆயிரம் கனவுகள்
ஆயிரம் ஆசைகள்
இடையில்
வாழ்க்கையின் ஓட்டம்
திசை திரும்பியது.
ஓட ஓட விரட்டியது
அதைவும்
தாண்டி வாழ்கிறேன்.
ஓட்டத்திலும்,
எனக்கு பிடித்ததெல்லாம்செய்தேன்,
செய்ய முயற்ச்சித்தேன்.
ஆனால்,
நசுக்கப்பட்டேன்
"பெண்களுக்கு இது தேவையில்லை",
என்ற
ஒற்றை வரி "மரண தண்டணையில்"

இன்று
எல்லாம் அடங்கிவிட்டது.
ஓட முடியவில்லை,
சமாதானம் ஆகிவிட்டேன்.
இனி
ஓடத் தைரியம் தேவை
அதற்க்கு,
ஊன்றுகோல் தேவை நண்பனே!
கால்கள் நசுக்கப்பட்ட
என்னைஊக்குவிக்க,
நண்பனாக நீ கிடைத்து இருக்கிறாய்.
"முயற்ச்சி செய்கிறேன்"
என்று சொல்லக் கூட
பயமாக இருக்கிறது நண்பனே!

அடிகள் எல்லாம் மறந்துவிட்டேன்.
வடுக்கள் என்னை பயமுறுத்துகின்றன.....
உனக்கு உண்மை சொல்கிறேன்,
"வீட்டில் அடிபட்டு விட்டேன்"
"வெளியே அடிபட பயமாக இருக்கிறது".
யாராவது, என்னை அணைத்து
கைபிடித்து வழிநடத்துவார்களா...!?
என்ற,
ஆசை!
இல்லை
பேராசை!
என்னை வதைக்கிறது நண்பனே,
என்னை உறங்கவிடாமல்....!




(நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன். ஆனால் என்னுடைய போராடும் குணம் தான் செத்துவிட்டது.15வருடத்திற்க்கு பின் என் வாழ்க்கை, தெளிந்த நீரோடை போல ஓடுகிறது.

"ப்ளாக்"கில் நான் எமுத ஆரம்பித்ததின் உண்மையான காரணம், என்னால் மற்றவர்களின் கடும் சொல்லை தாங்க முடியுமா என்று சோதிக்கத்தான்.

முதலில் சிறிது தடுமாற்றம் இருந்தது, இப்போது இல்லை(90% ஒக்கே). ராஜீவ்'விற்கு தனியாக 'ஸாரி' ,'நன்றி' என்று மெயில் அன்றைக்கே அனுப்பிவிட்டேன்).

No comments: