Wednesday, January 3, 2007

கேள்விகள்???

பிறந்ததின் அர்த்தம் என்ன?
எதற்க்காக வாழ்கிறோம்?
ஏதாவது அர்த்தம் இருக்கிறதா....!
பிறக்கிறோம்,
வளர்கிறோம்,
உண்கிறோம்,
உறங்குகிறோம்,
சண்டை போடுகிறோம்;
சமாதானம் ஆகிறோம்.


துக்கம்,சோகம்,மகிழ்ச்சி
ஏதாவது ஒன்று குறைந்து
அல்லது ஒன்று அதிகரித்தால்
பிறப்பின் அர்த்தத்தை
கேள்விக் குறியாக்குகிறோம்.

கேள்வியே அர்த்தமற்றது,
பிறப்பிற்க்கு அர்த்தம்
தேடும் அளவுக்கு
வாழக் காலம் நமக்கு இல்லை!

No comments: