Saturday, January 27, 2007

சில அர்த்தங்கள்!

(27-01-07--- 10.31 PM)


கோபமாக இருக்கிறோம்
என்பதற்க்கு
அர்த்தம்
கோபப்படும் "நபர்"

நம்மை விரும்பவில்லை
நம்மை மதிக்கவில்லை
என்று அர்த்தம்....
"இல்லை"!

அந்த நபரை
நாம் வெறுக்கிறோம்
என்றும் அர்த்தம்
"இல்லை"!

சிலநேரங்களில்
எதிர்பார்ப்புகள்....
மனதில் சிறு கிறுக்கள்களை
உண்டுபண்ணும்!

அதை வெளிப்படுத்தவேண்டும்
நம்மை பிடித்தவர்களிடம்
அல்லது
நாம் நம்புவர்களிடம்!


கோபம் என்பது
நெருப்பு போன்றது.
அதை
அணைக்கவேண்டும்!

அன்பு என்பது
சின்ன கோபத்திலும்
சிறிய எதிர்பார்பிலும்
"இறந்துவிடாது"!

சின்ன சின்ன கோபங்களும்
சின்ன சின்ன ஊடல்களும்
மனிதனை....
தன்னை உணரவைக்கின்றன!

உனக்கும் நன்றி நண்பனே!
உனக்கு தெரிந்த முறையில்
என்னை,
"சமாதானபடுத்தியதற்க்கு"...!!!

No comments: