Tuesday, January 30, 2007

நம்பிக்கை

(29-01-07--- 9.00 AM)


இரண்டு மாத கால வாழ்க்கை...
புரட்டிப்பார்த்தேன்!

எத்தனை சந்தோஷம்
எத்தனை அன்பு பரிமாற்றங்கள்!

கனவில் நடப்பது போல...
வானத்தில் பறப்பது போல!

அத்தனை சந்தோஷம்
என் கண்ணே பட்டுவிட்டது!

திருஷ்டி சுத்தி போட்டாலும்
போகாது போல...!

கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது என்பார்கள்!

சரியாகுமா..?
மனதின் மூலையில்...

சின்ன நம்பிக்கை ஆகும் என்று!
"நம்பிக்கை தானே...வாழ்க்கை"!!!

No comments: