நட்பு என்பதற்க்கு,
எல்லைக் கோடு தேவை!
இல்லை என்றால்,
எல்லைகள் மீறப்படும்!
மீறினால்,
வாழ்க்கை கேலிக்கூத்தாகிவிடும்!
நட்புக்கும், காதலுக்கும்,
இருக்கும் இடைவெளி...
ஒரு ஙாலிலை தான்!
என்பது,
ஒரு கவிஞனின் கருத்து!
உண்மையா....?
தெரியாது!
நம் உறவிற்க்கு ...
பெயர் உண்டு!
சகோதரன்! சகோதரி!
அதுதான்,
நான் எழுதும்...
கவிதையின்
"அலச்சியம்"!
என் உணர்வுகளை
உன்னால் புரிந்துகொள்ள முடியும்!
மற்றவர்களுக்கு,
புரியாது!
கவிதைக்கு முக்கியம்...
கரு
பொருள்
காதல்
பொய்மை
கற்பனை
தேடுதல்
அன்பு
சுடும் உண்மை!
"காதல்" என்பதற்க்கு,
மற்றொரு பெயர் "அபரிதமான அன்பு"!
அபரிதமான அன்பு,
யாரிடம் வேண்டுமானாலும் வரலாம்!
என்னுடைய கவிதையில்,
இருக்கும் "அத்துமீறல்கள்"
"சகோதரக் காதல்"!
கலவரம் தேவையில்லை நண்பனே!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment