Thursday, January 11, 2007

பனித்துளிகளாக......



கருத்த இருண்ட மேகங்கள்!
சலசலக்கும் மரங்கள்,
இதமான ஜில் என்ற காற்று!
அனுபவிக்கும் போதே;
"பனித்துளிகளாக மழைத்துளி"!


மனதில்,
சலசலக்கும் உணர்வுகள்!
இதமான தென்றலின் திடீர் பிரவேசம்;
மனம் முழுதும் நிரம்பி
மூச்சு முட்டுகிறது!


திணற அடிக்குமா?
திகட்டி விடுமா?
என்ற கவலை இல்லை!
விட்டு சென்று விடுமா?
என்ற பயம் இல்லை!


மனமும், உணர்வும்;
நர்த்தனம் ஆடுகிறது,
"கூத்தாண்டவர்" போல!
இதமான உணர்வுகள்;
மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன!


"பனித்துளிகளாக.............."

No comments: