Friday, January 5, 2007

மறக்க முடியாத நாள்

(22/12/06)

என்னுடை வாழ்க்கையில்,
முக்கிய இடம் பெற்ற நாள்;
முதல் நாள் நீ பண்ணிய போஃன்.


எங்கிருந்து வந்தாய்,
என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டாய்
'தம்பி', 'நண்பன்' என்ற அடைமொழியுடன்!


உன் முதல் குரலில்,
என் மனம் திறந்துவிட்டது,
இது வரை நடக்காதது.


எனக்கு எத்தனையோ பெயர்கள்
வைத்து இருக்கிறார்கள்;
ஆனால், "கேர்லிஸ்" முகம்


எனக்குத் தெரியாத,
அல்லது
நான் மறந்து போன முகம்.


உன்னிடம் மட்டும் தான்
வெளிப்பட்டு இருக்கிறது.
'நன்றி' நண்பனே!


இருபது வருடம் பழகிய தோழி,
மூன்று வருடம் பழகிய தோழி
இவர்களுக்கு தெரியாத உண்மைகள்


உன் ஒரு போஃனில்,
மடை திறந்த வெள்ளமாய்
கொட்டி இருக்கிறேன்.


என்ன மாயம் செய்தாய்?
எனக்கே புரியவில்லை!
குழப்பத்தில் உறங்க முடியவில்லை.


மறுநாள்,
உன் குரலை கேட்டதும்
புரிந்து கொண்டேன்.


நீ,
என்னுடன்விளையாடவில்லை.
நிம்மதி அடைந்தேன்.


அன்றிலிருந்து
உனக்கு என் வீட்டிலும்
அனுமதி;


என் மனதிலும் அனுமதி.
உன் ஒற்றை வரி சொல்லுக்கு
நான் தவமாக இருக்கிறேன்.


"நான் தான்"
இன்றும் என் காதில் ஒலிக்கிறது,
அசிரீரீ போல.....



என்னிடம் ஏன் இத்தனை அன்பு?
நீ கேட்ட கேள்வி,
விடை தேடுவதை நிறுத்திக் கொண்டேன்.


சில கேள்விகளுக்கு,
விடைகளே கிடையாது
புரிந்துகொள் நண்பனே!


"நீ என் தம்பி,
நான் உன் சேச்சி"
விடைகள் தேடாதே...!



"நன்றி" என்று சொன்னால்,
நம் உறவிற்க்கே அர்த்தம் இல்லை.
"சந்தோஷம் நண்பனே!" எல்லாற்றிக்கும்............

No comments: