என் வாழ்க்கையில்
பிரதானமாக அமர்ந்திருப்பது
"வலி-வேதனை"!
எதற்க்கு எல்லாமோ
இதை அனுபவித்து
இருக்கிறேன்!
முதல் முறையாக,
நண்பனுக்காக...
ஒரு நாள்
பேசவில்லை என்றால்
என் தலை வலிக்கிறது!
என் மனம் வலிக்கிறது!
என் சிந்தனை வலிக்கிறது!
எங்கே சென்றாயோ...
என்ன ஆனாயோ?
என் மீது கோபமா?
என்னை விட்டுவிடுவாயோ?
தேவை இல்லாத சிந்தனைகள்!
எனக்கே தெரிந்தாலும்...
என்னால் நிறுத்தமுடியவில்லை!
இதை நினைத்து
வருத்தப்படவா...
சந்தோஷப்படவா,
வேதனைப்படவா?
எனக்கே புரியவில்லை!
என்னை புரியாமல்
திணற வைக்கவும்...
ஆள் இருக்கிறது
என்பது
எனக்கே புதிதாக இருக்கிறது!
எனக்கு பிடிக்கவில்லை - வலி!
ஆனாலும்
பிடிக்கிறது - நண்பனை!
குழப்புகிறேனா?
அது தான்
"என் நிலைமையும்...!"
"டொடிங் தாமஸ்"...
"பைத்தியம்"
இரண்டுமே எனக்குப் பொருந்தும்!
நாம்,
ஒரே அலைவரிசை...
என்றால்
நீயும்,
இந்த வ்லி-வேதனை உணருகிறாயா
.................???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment