Saturday, January 13, 2007

தேடுதல்


என்ன தேடுகிறேன்?

எனக்கே தெரியாது!
ஆனாலும், தேடுகிறேன்.

பணத்தையா...?
இல்லை!
ஏற்க்கனவே பார்த்துவிட்டேன்!!!

அதன் மீது,
அன்றும் பிடிப்பு இல்லை!
இன்றும் பிடிப்பு இல்லை!!!

மனிதர்களையா...?
நிறைய;
"நிறங்கள்"...

எதுவும் மனதில்
பதியவில்லை!
காரணம்...

ஒரே அலைவரிசையை,
தேடுகிறேன்?
என்னுடைய "நிறம்"...

நான் தேடும்,
உயிருக்கும் இருக்கவேண்டும்!
என்னுடைய....

தேடுதல்;
என்ன என்று....
அந்த உயிருக்கும் புரியவேண்டும்!

தேடிதலில்,
எந்த எதிர்பார்பும்...
இல்லை!!!

ஒரே எதிர்பார்ப்பு...
நான் தேடுகிற "நிறம்"
உன்னிடம் இருக்கிறது!!!

அதை நீ,
புரிந்து கொள்வாயா?
கொள்கிறாய்!!!

இல்லை என்றால்,
எதற்க்காக.....
இத்தனை"கணிணிக் கடிதங்கள்"!!!


No comments: