Thursday, December 28, 2006

சின்ன சின்ன & பெரிய பெரிய ஆசைகள்


மதிய வெயிலில்,
கடற்கரையோரம் நட்க்க ஆசை! :)

அழகான சின்ன வீடு,
சுற்றிலும் மரம்,செடி,மலர்கள்! :(

ஊஞ்சலில் சாய்ந்தபடி,
நாள் முழுதும் படிக்கவேண்டும்! :(

நினைத்தவுடன்,
ஐஸ்கீரீம், சாக்லேட் சாப்பிடவேண்டும்! :)

மழையில்,
நனைந்தபடி நடக்கவேண்டும்! :)

பிடித்தவர்களுடன்,
நீண்ட தூரம் நடக்கவேண்டும்! :(

நிறைய மொழிகள்,
கற்றுக்கொள்ளவேண்டும்! :(

கடை கடையாக தேடி,
பிடித்த புத்தகம் வாங்கவேண்டும்! :(


---- பெரிய ஆசை நாளை தொடரும் :)))


தனிமை

தனிமை கொடுமையானதா?
தனிமை என்றதும் மிரண்டேன்.
தனிமை "செல்" போன்றதா!
என்னை அரித்து விடுமா?
பயந்தேன்,
மிரண்டேன்
கலங்கினேன்.
பின்புஉணர்ந்தேன்;
தனிமை இனிமையானது
தனிமை என்னை உணரவைத்தது
தனிமை என்னை பண்படுத்தியது
தனிமை என்னை நிமிரவைத்தது
தனிமை என்னை தைரியமாக்கியது
தனிமை என்னை சுயமாக சிந்திக்கவைத்தது
தனிமை என்னை வாழவைத்தது.
உலகத்துடன் ஒத்துப்போக உதவியது
தனிமை கொடுமையானது இல்லை
மிக இனிமையானது
இது ஒரு "வரம்"
தெளிந்தவர்களுக்கு...........!

அன்பு

அன்பு
யாரிடம்அன்பு செலுத்துவது?

வரைமுறை உண்டா?
அன்பு கண்டிக்கும்
அன்பு விட்டுக்கொடுக்கும்
அன்பு உதவும்
அன்பு ஏமாற்றும்
அன்பு நம்மை கேலிகூத்தாக்கும்.
ஆனால்,
அன்பு நிலையாது

யாரிடம் அன்பு செலுத்துவது...
என்னை விரும்புவர்களிடம்!
அல்லது
நான் விரும்புவர்களிடம்!
இரண்டுமே ஒன்றுதான்.
"அன்பு"
நம்மை "முட்டாள்" ஆக்கும்
ஆனால்
வாழவைக்கும்.

சுதந்திரம்

சுதந்திரம்,
எங்கே கிடைக்கும்?
தேடினேன்...
எனக்குள் தான் இருக்கும்
என்பதை,
அடிபட்ட பின்பு தான்
தெரிந்து கொண்டேன்!

சுடும் உண்மை....




கருத்த மேகத்தை
ஆசையுடன் நோக்கும்
ஆறுகள்,ஏரிகள்,குளங்கள்....

அதே மேகத்தை
பயத்துடன் நோக்கும்
நடைபாதை குடும்பங்கள்!

reality



காலம் என்னை ஏமாற்றிவிட்டது
"யோசித்தேன்"
காலத்திடம் கோவித்தால்
மீதி இருக்கும் காலத்தை
எப்படி ஒட்டுவது
தற்கொலை செய்தா......???