உறவுகள் - Dr. ருத்ரன்
நட்பின் முக்கியமான அடையாளங்கள் நம்பிக்கையும், நெருக்கமும் தான். இவை இருந்தால் சந்தேகம் வராது.
நம்பிக்கை போலவே நெருக்கமும் நட்பின் முக்கிய அங்கம். நெருக்கம் என்பது உள்ளே ஏற்ப்படும் உணர்வு. காலம் - தூரம் ஆகியவற்றை மீறியும் நெருக்கம் இருக்கும். அருகில் அமைவது தான் நெருக்கம். அருகில் இருக்கும்வரைதான், இருந்தால்தான் நெருக்கம் என்பதில்லை . வாழ்வின் அவசியங்கள் நண்பர்களை வெவ்வேறு ஊர்களில், நாடுகளில் வாழ வைக்கலாம். இந்த தூரம் நட்பைப் பாதிக்காது.
ஒரே கருத்து, ஒத்தவிருப்பு நண்பர்களிடையே இருக்க வேண்டியதில்லை. நட்பிற்கு ஆண்-பெண் பாகுபாடும், வயது வித்தியாசமும் தடையாகாது. இருவரிடையே உள்ள அன்பும் அக்கறையும் இதைமீறி ஆழமானது என்ற நம்பிக்கையே நட்பு.
நட்பும் காதலைப் போல ஒரு ஈர்ப்பின் அடிப்படையில் தான் ஆர்ம்பிக்கும். அந்த ஈர்ப்பு தற்காலிக கவர்ச்சியா, நிரந்தர நெருக்கமா என்பதை பொருத்தே நட்பு மெருகேரும், தொடரும்.
எத்தனையோ காரணங்களுக்காக எத்தனையோ நபர்களிடம் நமக்கு ஈர்ப்பு ஏற்படலாம். அந்த ஈர்ப்பை ஆராய்ந்தால் அது ரசிப்பா,வியப்பா, மதிப்பா இல்லை இனம் புரியாமல் இன்னும் தொடரவேண்டும் என்ற விருப்பா என்பது விளங்கும்.
நண்பர்கள் அமைவது நம் வசம்தான் உள்ளது. போலியாகப் பழகாமல் அதே நேரம் போலித்தனத்தைப் பரவாயில்லை என்று விட்டு விடாமல் தெளிவாக இருந்தால் நட்பு நல்ல முறையில் அமையும். பொய்யான உறவு ஒரு நாள் உடையும். உண்மையான நட்பு எந்தக் காலகட்டத்திலும் உறுதியாக இருக்கும்.
இளமையில் ஏற்ப்படும் நட்புதான் பலருக்கு நெடுங்காலம் நீடிக்கிறது. காரணம் அந்த இளமை, உணர்ச்சிகளையும் ரசனைகளையும் போலியாக வெளிக்காட்டாத பருவம். அந்த குறை - நிறைகளோடு ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொண்டபின், பின்னாளில் கருத்து வேறுபாடு சிறிய கோபமாக வெளிவருமே தவிர வெறுப்பாய் கசப்பாய் மாறாது.
ஆண் பெண்நட்பில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அதிகம். நட்புக்கும் காதலுக்கும் நிறைய பேருக்கு வித்தியாசம் புரியாதலால் ஆண் பெண் நண்பர்கள் பலர் தொடர்து பழக முடியாமல் பிரிய நேர்கிறது.இதற்க்கு பிறர் காரணமல்ல - நம் கோணத்தின் கோணலும் காரணமாகலாம். ஆணும் பெண்ணும் காதலர்களாகவோ, உடப் பிறந்தவர்களாகவோ ( அல்லது அந்த உறவு சொல்லி அழைத்துகொள்பவர்கவோ) மட்டுமே இருக்க முடியும் என்ற சமுதாய மூட நம்பிக்கைதான் காரணம். இந்த மூடநம்மிக்கையை நாமும் கற்றுக் கொண்டு பின்பற்றினால் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, நல்ல நண்பர்களை - அவர்கள் வேறு பாலினத்தை சார்ந்த காரணத்தாலேயே இழக்க நேரிடுகிறது.
நட்பையும் காதலையும் புரிந்து கொண்டால் - வாழ்க்கையை சுகமாகவும் வளமாகவும் அமைத்துக் கொள்ள அவை உதவும். உறவுகளில் மிகவும் உதவியானவை நட்பும் காதலும் தான்.
(Balaji, அதனால் தான் என்னை சேச்சி என்று அழைத்தாயா? சமூகத்திற்க்கு பயந்து அல்லது என்னை பார்த்து பயந்து- அல்லது உன்னை நினைத்து பயந்து. பதில் தேவை நண்பனே. கலப்பிடம் இல்லாத உண்மை தேவை)
(நீ உண்மை சொன்னால் நானும் சொல்வேன் - promise)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment