Monday, January 8, 2007

காத்திருத்தல்...


காத்திருத்தலும் இனிமையே!
ஆனால்,


சில நேரங்களில்
காரணம் முக்கியம்.


அதைவிட,
காத்திருக்க வைக்கும் நபர்!


காத்திருக்கும் போது வரும் உணர்வு;
எதிர்பார்ப்பு!


எதிர்பார்ப்பு,
கோபத்தை உண்டுபண்ணும்.


கோபம்,
சிந்தனையை சிதைக்கும்.


சிதையும் சிந்தனை;
தடித்த வார்த்தைகளாக வெளிப்படும்


வெளிப்படும் வார்த்தை,
அடுத்தவரை பாதிக்கும்.


பாதித்தவர் வருத்தப்படும் போதுதான்,
நம்முடைய தவறு புரியும்.


புரிந்தபின்,
மன்னிப்பு கேட்க்கவில்லை என்றால்?


அங்கே,
காத்திருந்ததின் அர்த்தமே பயனற்றது!


காத்திருக்க வைத்ததிற்க்கு,
ஞாயமான காரணங்கள் இருக்கலாம்.


புரிந்து கொள்ளாதலால்,
வந்த தவறு!


அதனால்,
"மன்னிக்கவும்"... habibi and akh!



No comments: