(5-02-07---- 8.00 AM)
வானத்தை கையில் பிடிக்கவேண்டும்
அதை போர்வையாக போர்த்திக்கொள்ள!
பனியை பிடிக்க வேண்டும்
என் மனதை குளிரவைக்க!
காற்றில் பறக்கவேண்டும்
பட்டாம் பூச்சி போல - தடுமாறாமல்!
நிலவை எட்டிப் பிடிக்கவேண்டும்
என் தூக்கத்தை இனிமையாக்கியதற்க்காக!
சூரியனை நிமிர்ந்து பார்க்கவேண்டும்
எனக்கும் கோபம் வரும் என்று சொல்ல!
பூக்களின் மலர்ததலில்
சிரிப்பை சிறை வைக்கவேண்டும்!
கடலை பார்த்து பொறமை
ஓயவேமாட்டாயா!
மழையை பார்த்து கேட்க்கவேண்டும்
அழுகையா, ஆனந்தக் கண்ணீரா?
இயற்க்கையே என்னை
எப்படி சிறை வைப்பாய்?
உன்முன் எல்லோருமே
சமம் தானே!!!
(too much fog here(6.00) and i was so mermerised by that fog and i saw the first sunshine through that fog .... simply fantastic. so my happy debate with the nature)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment