காகிதத்தில் கண்டேன்
என்னை எழுத்து வடிவில்.
வடிவத்தில் இருந்தது
என் மனதா...?
மனது என்பது
என் மூளையா?
என் எண்ணமா?
என் உணர்வா?
என் கற்ப்பனையா?
என் செயலா?
இல்லை வெறும்...
எழுத்து தானா...?
எழுத்தாக இருந்தால்
நிம்மதி!
என் கற்பனையாக இருந்தால்
தப்பித்தேன்!
என் உணர்வாக இருந்தால்
பிழைத்தேன்!
என் எண்ணமாக இருந்தால்
வருத்தப்படுவேன்!
என் மூளையாக இருந்தால்
வாழ்வேன்!
மூளைக்கு மட்டுமே...
உண்மை புரியும்.
மனது என்பது கண்ணாடி போல
...உடைந்துவிடும்.
அதனுடன் சேர்ந்து, மற்றதும்
மடிந்துவிடும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment