Wednesday, February 21, 2007

அர்ச்சனா - 1

"அர்ச்சனா... ஏய் என்ன பகல் கனவா? ஷாலினி அர்ச்சனாவின் தோளை மெதுவாக தட்டினாள்.

அர்ச்சனா பதட்டத்துடன் திரும்பினாள்.
"என்ன ஷாலு" அமைதியாக கேட்டாள்.


"என்ன பிராப்ளம்?" ஷாலினி அவளை சிறிது யோசனையோடு நோக்கினாள்.

"நான் லேட்டாதான் வருவேன்... நீ போயிடு ஷாலு" அர்ச்சனாவின் குரலில் சிறு வருத்தம் இருந்தது.ஷாலினி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.


அர்ச்சனாவின் வீட்டில் எப்போதும் எதாவது பிரச்சனை இருக்கும். நாளை எப்படியும் அதைப்பற்றி பேசுவாள்.

ஷாலு அர்ச்சனாவின் ஐந்து வருட தோழி, இருவருக்கும் நல்லதொரு உறவு இருந்தது.


ஷாலினி சென்றதும் அர்ச்சனா தன் வேலையில் மூழ்கினாள். அவளுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மனமில்லை.வீட்டிற்க்கு செல்லவேண்டும் என்று நினைத்தாலே மனது கனத்தது.


ஆபீஃஸில் ஆள் யாருமே இல்லை ப்பூனை தவிர..... இவள் அடிக்கடி இப்படி லேட்டாக செல்வதை அவன் அறிந்தே இருந்தான்.


அர்ச்சனா சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். ஐந்து அடி ஐந்து அங்குலத்தில் கோதுமை நிறத்தில்.... அழகாக இருந்தாள். நீண்ட கூண்டல், முகம் அதுதான் அவளுடைய வரப்பிரசாதம். கடவுள் வஞ்சனை இல்லாமல் படைத்து இருந்தான். சிறிது பத்மினியை நினைவுபடுத்தும் முகம்.


குணத்தில் அவளை போல் இல்லை என்று அவளை பற்றி தெரிந்தவர்கள் எல்லோரும் பாராட்டுவார்கள். மிகவும் அடக்கமானவள்.அர்ச்சானாவின் தந்தை சாதாரண குமாஸ்தாவாக வேலை பார்த்துவந்தார்.... ஆறுவருடம் முன்பு ஏற்ப்பட்ட பஸ் விபத்தில் ஒரு காலை இழந்துவிட்டார்.


அதன்பின் எல்லாம் இவள் தலையில் வந்து விழுந்தது.அவள்தான் முதல் பெண் என்பதால் வேறு வழி இல்லை. இவளுக்கு பின் இரண்டு தங்கைகள்.

அம்மா சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டதாலோ என்னவோ முரட்ருக்குணத்துடன் இருந்தார்கள்.அர்ச்சனா எப்படியோ பி.காம். முடித்துவிட்டாள்.தெரிந்தவர்களின் உதவியுடன் இங்கே சேர்ந்தாள். வெறும் டைப்பிஸ்ட்டாக சேர்ந்தாள்... இன்று அக்கெளண்ட் பிரிவில் இருக்கிறாள். எ.காம். முடித்துவிட்டாள் இப்போது..... தோழியிடம் கம்யூட்டர் படிக்கிறாள்.


அர்ச்சனாவை நம்பி தான் அவள் குடும்பம் என்பதால் .... பணம் ...பணம் என்று பிய்த்துக்கொண்டு இருந்தனர். தந்தையின் மருத்துவ செலவு, தங்கைகளின் படிப்புசெலவு.... வீட்டு வாடைகை, மளிகை சாமான், தங்கைகளின் உடை இதில் அன்னையின் மருத்துவ செலவு என்று விழிபிதுங்கி போகிறாள் ஒவ்வொறு மாதமும்!


தங்கைகள் இருவரும் அவள் அன்னையை போல எதைப் பற்றியும் கவலை இல்லை... அவர்கள் தேவை முடிந்ததா... சென்றுவிடுவார்கள்.இன்றைய பிரச்சனை அவள் அன்னையின் ஸ்கேன்னுக்கு பணம் வேண்டும். அரசு மருத்துவமனையில் சென்றுபார்க்களாம் ஆனால் மறுத்துவிட்டார் அவளுடைய தாய்.


யாரிடம் பணம் கேட்ப்பது....?இதுவரை இருவரிடம் கேட்டு இருக்கிறாள்... ஷாலினி இவளுடைய பாஸ் சீஃப் மிஸ்டர். இராமநாதன். இவளை தன்னுடைய மகள் போல நடத்தினார்.



அவள் வேலை பார்க்கும் கம்பெனி பல இடங்களில் தங்களின் கைவரிசையை காண்பிக்கிறது.பல தொழில்கள் பார்க்கின்றன... இவள் இருப்பது தான் மெயின் அலுவலகம். அதனால் எம்.டியை அடிக்கடி பார்த்து இருக்கிறாள்.



இரங்கநாதன் ஊருக்கு சென்று இருக்கிறார். ஷாலுவிடம் ஏற்க்கனவே இருமுறை வாங்கியதையே தரவில்லை.....


தான் இத்தனை கஷ்டப்பட்டாலும் தன்னை ஏன் வீட்டில் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? ஏதோ நான் ஏ.ஸி யில் உட்க்கார்ந்து தூங்கிவிட்டது போல அல்லவா நினைக்கிறார்கள்.


தனக்கும் கவலை உண்டு, அசதி உண்டு.... ஏன் சிந்திக்கமுடியவில்லை அவர்களால்.... தான், தான் அதற்க்குக் காரணமா? அவர்களிடம் தன்னை வெளிப்படுத்தாதது தன் தவறோ...?


இதெ கம்பெனியில் அவளை இருவர் மணந்து கொள்வதாக கேட்டனர். மிகவும் நல்லவர்கள்...ஆனால் அவளுடைய இந்த சிலுவை சுமக்கும் வாழ்க்கைக்கு கல்யாணம் ஒத்துவராது என்று மிக மென்மையாக மறுத்துவிட்டாள்.

அவர்கள் இருவரும் இன்று ஒரு வயது முழந்தையுடன்..... !


காதல் கத்தரிக்காய் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அப்படியே காதலித்தாலும் அவள் கல்யாண்த்தை வீட்டில் ஒத்துக்கொள்ளப்போவது இல்லை...


அவளுக்கு நடந்த நல்ல விஷயமாக நினைப்பது... இந்த வேலை, ஷாலினி... ரங்கநாதன்!


அழுகை வந்தது, வீட்டில் அழுதால் அதுவே பெரிய பிரளயத்தை கிளப்பிவிடும்.போன முறை இவள் அழுதுவிட இவளுடைய தாய் பிலுபிலு என்று பிடித்துக்கொண்டாள்...."நான் என்ன கொடுமைக்காரியா இப்படி ஒப்பாரி வைக்கிற... எல்லாம் என் தலைஎழுத்து" அவர்கள் போட்ட போடில் இவள் திகைத்துப்போனாள்.


அன்றிலிருந்து அவள் வீட்டில் கண்ணீர் விடுவது இல்லை.ஆபீஸீல் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் மேஜையில் தலை கவிழ்து அழ ஆரம்பித்தாள்.ஆனால் இவள் தனியாக இல்லை.



எம்.டி. அறையில் இருந்து வெளியே வந்த அந்த உருவம்... இவள் அருகே வந்து நின்றது சத்தமில்லாமல்..........

திகைப்புடன் அவளை பார்த்தது செய்வது அறியாது நின்ற உருவம் மெதுவாக கேட்டது "இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்......"


தூக்கிவாரிப்போட நிமிர்ந்தாள்... கண்ணீரை துடைக்க மறந்து அந்த உருவத்தை நோக்கினாள்....

No comments: