Thursday, February 8, 2007

எங்கே ஓடுகிறார்கள்...?

(8-02-07--- 8.20 AM)

எத்தனை மனிதர்கள்
விதவிதமாக...
இங்கும் அங்கும் பறந்தபடி
எதை தேடுகிறார்கள்?
எதை தொலைத்தார்கள்?
எதை எதிர்பார்கிறார்கள்?
ஏதேதோ எதிர்பார்ப்புகள்!
சிரித்த முகம்
சிந்தனை முகம்
சிடு சிடு முகம்
கப்பலை கவிழ்த்தது போல
சிலரோ...
உலகமே தங்கள் கையில் என்பது போல
கம்பீரமாக!
ஆனால்
எல்லோரும் ஒன்றுதான் செய்கிறார்கள்.......
ஓடுகிறார்கள்!
ஒரே கேள்வி...
எதை நோக்கி....?

No comments: