அமைதியான சூழலில்
ஆழ்ந்த சிந்தனையில்,
ஆன்மாவிடம்... ஒரு கேள்வி...
என்னுடைய ஆன்மா, நிழல்...
நல்லதா... கெட்டதா...?
ஆன்மாவின் பதில்...
எனக்கு தெரிந்தால்
உனக்கு தெரிந்து இருக்கும்.
உன் நிழலை கேள்...
அது உன்னுடன் தானே வருகிறது.
நிழலிடம் கேள்வி
பதில்.....
"ஆன்மா" ... நல்லது
உன் நிழல்
உன்னுடைய கவசம்.
இரண்டையும் எடை போடாதே...
எடை போட்டால்
அமைதி போய்விடும்.
அமைதியாக சிந்தித்தேன்
"எடை போடுவதை நிறுத்திவிட்டேன்"!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment