Monday, October 1, 2007

முடியாது ... முடியவில்லை...?

எத்தனை தான் மனதை
தேற்றினாலும்,

திரும்ப திரும்ப ஒலிக்கும்
ஒரே மந்திரம்!

"உன்னால் முடியாது"
எனற பிரியமானவரின்

"அன்புக் குரல்"
கால்களை கட்டிப்போடுகின்றன!

சங்கிலியால் பிணைத்தால்,
கழட்டி விடலாம்!

போட்டது என்னவோ,
சொல்லால் அல்லவா....

அது விழுந்தது,
நெஞ்சில்!

இரத்தத்தில் கலந்துவிட்டது
பிரித்து எடுக்க முடியாமல்!!!

சொல்லை மீற
அதிக நேரம் தேவையில்லை.

ஆனால், பின்விளைவுகள்
குடும்பத்தை பாதிக்கும்.

பாதிப்பு இல்லாமல்
வர முயற்ச்சிக்கிறேன்!

முடியும் என்று,
"பக்ஷி" சொல்கிறது.

No comments: