Thursday, December 28, 2006

தனிமை

தனிமை கொடுமையானதா?
தனிமை என்றதும் மிரண்டேன்.
தனிமை "செல்" போன்றதா!
என்னை அரித்து விடுமா?
பயந்தேன்,
மிரண்டேன்
கலங்கினேன்.
பின்புஉணர்ந்தேன்;
தனிமை இனிமையானது
தனிமை என்னை உணரவைத்தது
தனிமை என்னை பண்படுத்தியது
தனிமை என்னை நிமிரவைத்தது
தனிமை என்னை தைரியமாக்கியது
தனிமை என்னை சுயமாக சிந்திக்கவைத்தது
தனிமை என்னை வாழவைத்தது.
உலகத்துடன் ஒத்துப்போக உதவியது
தனிமை கொடுமையானது இல்லை
மிக இனிமையானது
இது ஒரு "வரம்"
தெளிந்தவர்களுக்கு...........!

No comments: